பிரேமலதா (கோப்புப்படம்) DIN
தமிழ்நாடு

பொய் வாக்குறுதிகளால் பொங்கல் தொகுப்பை மக்கள் புறக்கணித்துள்ளனர்: பிரேமலதா

பொய் வாக்குறுதிகளால் பொங்கல் பரிசு தொகுப்பை மக்கள் புறக்கணித்துள்ளனர் என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

DIN

பொய் வாக்குறுதிகளால் பொங்கல் பரிசு தொகுப்பை மக்கள் புறக்கணித்துள்ளனர் என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு, ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த 2020ல் ஆயிரம் ரூபாய், 2021ல் 2,500 ரூபாய், 2022ல் ஆயிரம் ரூபாய், கடந்த 2023ல் ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டது. ரொக்கமும் சேர்த்து வழங்கப்பட்டதால் கடந்த ஆண்டுகளில், அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒருகிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகிய மூன்று பொருட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது, ரொக்க பணம் வழங்கப்படவில்லை. மொத்தம் 2.21 கோடி ரேஷன் அட்டை தாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகுப்பை, 1.87 கோடி பேர் வாங்கியுள்ளனர். மீதி 33 லட்சம் பேர் வாங்கவில்லை.

கர்நாடக மாநில பாஜக தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறும்: சிவராஜ் சிங் சௌஹான்

விளம்பர மாடல் ஆட்சியிலே பொங்கலுக்கு வழங்கிய பரிசு தொகுப்பினை மக்கள் புறக்கணித்துள்ளனர், கொடுத்த அரிசியும், சர்க்கரையும் எடை குறைவாக வழங்கப்பட்டதாகவும், திமுக அரசு சொன்ன வாக்குறுதிப்படி ரொக்கப் பணம் கொடுக்காததாலும், தமிழக மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை புறக்கணிப்பதைப் போல, வெகு விரைவில் 2026ல் இந்த ஆட்சியையும் புறக்கணிப்பார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த அரசின் மீது அதிருப்தியால் தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லாபம் உண்டாகும் இந்த ராசிக்கு!

தில்லியில் போலி எஞ்சின் எண்ணெய் உற்பத்தி ஆலை கண்டுப்பிப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

கனிம நெருக்கடி!

வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!

SCROLL FOR NEXT