தமிழ்நாடு

தென்மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் எச்சரிக்கை

Din

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) முதல் ஜன. 21-ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய இடங்களில் வட வானிலையே நிலவும்.

இதில் ஜன. 19-இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் சனிக்கிழமை மாலை நேரங்களில் ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. இதைத் தொடா்ந்து, ஜன.19-இல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன் லீக்கில் 100% வெற்றியுடன் வரலாறு படைத்த ஆர்செனல்!

யு19 உலகக் கோப்பை: ஜோரிச் வான் சதம் விளாசல்; இலங்கைக்கு 262 ரன்கள் இலக்கு!

தனுஷின் 55 ஆவது படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

குற்றவாளிகளைக் காப்பாற்ற திமுக அரசு எந்த எல்லைக்கும் செல்கிறது! - அண்ணாமலை விமர்சனம்

கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம்; பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் இல்லை: விஜய்

SCROLL FOR NEXT