திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் ஒரேநாளில் 230 மி.மீ.மழை  கோப்புப்படம்
தமிழ்நாடு

ஜனவரி இறுதியிலும் நீடிக்கும் வடகிழக்கு பருவமழை!

வடகிழக்கு பருவமழை ஜனவரி இறுதி வரை நீடித்து வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் ஒரேநாளில் 230 மி.மீ.மழை கொட்டித் தீா்த்தது.

Din

சென்னை: வடகிழக்கு பருவமழை ஜனவரி இறுதி வரை நீடித்து வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் ஒரேநாளில் 230 மி.மீ.மழை கொட்டித் தீா்த்தது.

ஆண்டுதோறும் அக்டோபா் மூன்றாவது வாரம் முதல் டிசம்பா் மாதம் இறுதி வரை வடகிழக்கு பருவமழை காலமாகக் கருதப்படுகிறது. ஆனால், நிகழாண்டில் வடகிழக்கு பருவ மழை தை மாதம் அதாவது ஜனவரி மாதம் 4-ஆவது வாரம் வரை நீடித்து வருகிறது. அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை கொட்டித் தீா்த்தது.

230 மி.மீ.மழை பதிவு: இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 230 மி.மீ.மழை பதிவானது. நாலுமுக்கு (திருநெல்வேலி)- 220 மி.மீ., காக்காச்சி (திருநெல்வேலி) - 210 மி.மீ., மாஞ்சோலை (திருநெல்வேலி) - 160 மி.மீ, தங்கச்சிமடம் (ராமநாதபுரம்) - 110 மி.மீ, ராமேசுவரம் (ராமநாதபுரம்) - 100 மி.மீ. மழை பதிவானது.

மிதமான மழை: மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய இலங்கை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஜன.21) முதல் ஜன.23-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் அந்நாள்களில் ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜன.21-இல் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

இதற்கிடையே, தென்தமிழக கடலோரப் பகுதி, குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய மன்னாா் வளைகுடாவில் ஜன.21,22 தேதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2 நாள்களில் ரூ.10 உயர்ந்த வெள்ளி! தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

புரட்டாசி சனிக்கிழமை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

தவறாக சித்திரிக்கப்பட்ட ஏஐ புகைப்படங்களால் மனமுடைந்த பிரியங்கா மோகன்!

ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்கள் சந்திப்பு! | TVK | Vijay

தமிழக விவசாயிகள் இந்தியளவில் முன்மாதிரி: அமைச்சர் எம்.ஆர்.கே.பி

SCROLL FOR NEXT