பரந்தூரில் விஜய்.  
தமிழ்நாடு

ஆளுங்கட்சி நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள்: பரந்தூரில் விஜய் பேச்சு

ஆளுங்கட்சி நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள் என்று பரந்தூரில் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

DIN

ஆளுங்கட்சி நாடகத்தை மக்கள் இனியும் நம்பமாட்டார்கள் என்று பரந்தூரில் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

பரந்தூரில் மண்டபத்திற்கு வெளியே தொண்டர்கள் மத்தியில் திறந்த வேனில் விஜய் திங்கள்கிழமை பேசியதாவது, நாட்டிற்கு விவசாயிகள் முக்கியம், உங்களுக்காக எப்போதும் நான் இருப்பேன். பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் திரும்பப் பெற வேண்டும்.

ஆளுங்கட்சியின் நாடகத்தை மக்கள் இனி நம்பமாட்டார்கள், மக்கள் இனி சும்மாவும் இருக்க மாட்டார்கள். வளர்ச்சி என்ற பெயரில் நடைபெறும் அழிவு மக்களை பாதிக்கும்.

இயற்கை வளம் காப்போம் என்பது நமது கொள்கை, ஓட்டு அரசியலுக்காக நான் பேசவில்லை. விமான நிலையம் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை, வளர்ச்சிக்கு நான் எதிரானவன் இல்லை.

பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றே நான் கூறுகிறேன். பரந்தூர் மக்களுக்காக உறுதியாக இருப்பேன், சட்ட போராட்டம் நடத்துவோம். விவசாய நிலங்களை அழித்து பரந்தூர் விமான நிலையம் வருவதை ஏற்க இயலாது.

காணும் பொங்கல் விடுமுறையை ரத்து செய்ய பரிந்துரைப்போம்: பசுமை தீர்ப்பாயம்

விவசாய நிலங்களை அழிப்பது மக்கள் விரோத அரசாகத்தான் இருக்கும். 90% நீர் மற்றும் விவசாய நிலங்களை அழித்து விமான நிலையத்தை கொண்டு வரவுள்ளனர்.

8 வழிச்சாலையை எதிர்த்ததுபோல பரந்தூர் திட்டத்தை ஏன் தற்போதைய அரசு எதிர்க்கவில்லை?. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு. ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சா?

பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் ஆட்சியாளர்களுக்கு ஏதோ லாபம் உள்ளது.

அரிட்டாபட்டி மக்கள் போலதான் பரந்தூர் மக்களையும் பார்க்க வேண்டும். டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்தது போல பரந்தூர் திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும்.

பரந்தூர் ஊருக்குள் வர எனக்கு ஏன் தடை என்று புரியவில்லை. தவெக தொண்டர்கள் நோட்டீஸ் தரக்கூட தடை விதித்தார்கள். உங்கள் குல தெய்வங்கள் மீதான நம்பிக்கை வீண் போகாது.

நம்பிக்கையோடு இருங்கள், உங்கள் வீட்டுப் பிள்ளையாக நிற்பேன். என் கள அரசியல் பயணம் இங்கு இருந்துதான் தொடங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தவெத தலைவர் விஜய் முதன்முறையாக கட்சி கொடி பொருத்தப்பட்ட பிரசார வாகனத்தில் பரந்தூருக்கு வந்தார். அவரை வழிநெடுகவிருந்த தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT