நாளை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும்: முதல்வர் ஸ்டாலின் தகவல்
நாளை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடுநாளை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும்: முதல்வர் ஸ்டாலின் தகவல்
நாளை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நாளை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது! வாய்ப்புள்ளோர் நேரில் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும் என்று பகிர்ந்துள்ளார்.
இதனால், தமிழக மக்களிடைய ஆச்சரியமும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அழைப்பிதழை மேற்கோள்காட்டி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இரும்பின் தொன்மை நூல் வெளியீடு, கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் விழா, அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் நாளை நடைபெறவிருக்கிறது.
மேலும், இவ்விழாவில், கீழடி இணையதளத்தினையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கவிருக்கிறார்.
இதற்கான அழைப்பிதழ்களை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இணைத்திருக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் 'இரும்பின் தொன்மை' எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிகழ்வு 23.01.2025 அன்று காலை 10 மணி அளவில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடை பெற உள்ளது. அனைவரும் வருக என்று பதிவிட்டுள்ளார்.