FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்துக்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழகத்துக்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து

Updated On : 11 பிப்ரவரி 2026, 12:31 pm IST
முதல்வர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை: தமிழகத்துக்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று கூறினார்.

சென்னையில் இன்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசியல் குறித்தும் பேசினார்.

தமிழக அரசியல் குறித்துப் பேசிய முதல்வர், தமிழகத்துக்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது, தமிழகத்தில், காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார். இது, வரும் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, கூட்டணி ஆட்சிக்கு வலியுறுத்துவோம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் முன் வைத்து வரும் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

Advertisement

Advertisement

மேலும் நிகழ்ச்சியில் பேசிய மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கக் கூடிய கட்சிக்கு இடையே வித்தியாசம் 12 சதவிகிதம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் மிக எளிய கணக்குதான், 3 சதவீத வித்தியாசம் இருந்தாலே அது க்ளீன் ஸ்வீப்தான். 12 சதவீதம் என்றால் அது தம்ப்பிங் விக்டரிதான் என்று கூறியுள்ளார்.

அதற்காக மெத்தனமாக இருந்துவிட மாட்டோம். இந்த கருத்துக் கணிப்பு எங்களுக்கான பூஸ்ட். திமுக கூட்டணி மக்களுக்காக இருக்கக் கூடிய இயக்கம். இன்னும் உற்சாகத்துடன் உழைத்து இந்தக் கணிப்பை உண்மையாக்குவோம் என்றார்.

மேலும் 2021ஐ விட இந்த தேர்தல் மிகக் கடினமாக இருக்குமா? என்ற கேள்விக்கு, எதிரில் இருக்கும் கூட்டணிக் கட்சிகளின் குழப்பம்தான் இருக்குமே தவிர, எங்களது வெற்றி சிறப்பாகவே இருக்கும். 2021ஆம் ஆண்டை விட தற்போது மிக எளிதாகவே இருக்கும். ஏனென்றால், முன்பு செய்வோம் என்று சொல்லி வந்தோம். தற்போது ஏராளமான சாதனைகளை செய்திருக்கிறோம் என்றார்.

நீங்கள் கிரிக்கெட் விளையாடியிருக்கிறீர்களா என்று நிகழ்ச்சியில் கேட்கப்பட்டதற்கு, பள்ளியில், சாலைகளில் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். சேப்பாக்கத்தில் தமிழகத்துக்கு நிதி திரட்ட நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்றுள்ளேன் என்றார் ஸ்டாலின். மேலும் தான் எப்போதுமே பௌலர்தான் என்றும் ஆஃப் ஸ்பின் பௌலர் என்றும் கூறியிருந்தார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் இதே கருத்தை வலியுறுத்தி பேசி வரும் நிலையில், அவர்களது பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில், திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பதிலளித்துள்ளார்.

Tamil Nadu Chief Minister M.K. Stalin says that a coalition government is not suitable for Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments