தவெக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின்
தவெக ஆட்சி உள்ள வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி இருக்கும்வரை விடிவே இல்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
குழந்தைகள் காணாமல் போவது, பட்டப் பகலில் கொலைச் சம்பவங்கள் போன்றவை தமிழ்நாட்டில் அதிகரித்திருப்பதாகக் கூறி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பட்டப் பகலில் இளைஞர் ஒருவரைக் கொலை செய்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் செல்லும் கொலையாளிகளின் விடியோவை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள மு.க. ஸ்டாலின்,
Advertisement
Advertisement
சிறை, பள்ளி, சாலை, நீதிமன்றம் என எங்கும் பாதுகாப்பில்லை!
இதைப் பற்றி எல்லாம் முதலமைச்சருக்கு அக்கறை இல்லை. அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் இல்லை. குற்றவாளிகளுக்கு பயமில்லை.
த.வெ.க. ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பியது குறித்து நேற்று பதிவிட்டிருந்த மு.க. ஸ்டாலின், ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன். சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது.
புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர்.
ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள்.
தவெக அரசு மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது என்று பதிவிட்டிருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.