இணையதளம் தொடக்கம் 
தமிழ்நாடு

கீழடி இணையதளம் தொடக்கம்: மெய்நிகர் விடியோவும் இணைப்பு

கீழடி இணையதளம் தொடக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தொல்லியல் பெருமைவாய்ந்த பொருள்களை மெய்நிகர் விடியோவில் காணலாம்.

DIN

கீழடியில் அகழாய்வு மூலம் தோண்டி கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பெருமைவாய்ந்த பொருள்களை இணையதளம் வாயிலாகக் காணும் வகையில் கீழடி இணையதளத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கீழடி அருங்காட்சியத் திரையரங்கில் திரையிடப்படும் ஆவணப்படம் மற்றும் காட்சிக் கூடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து வகையான தரவுகள் எனக் கீழடி அருங்காட்சியகம் குறித்தான விவரங்களயும் இந்த மெய்நிகர் சுற்றுலாவில் கண்டு மகிழலாம்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் துறையினர் அகழாய்வுகளை மேற்கொண்டு, பல பெருமை வாய்ந்த் தொல்லியல் கட்டமைப்புகள் மற்றும் பொருள்களைக் கண்டறிந்துள்ளனர். இவற்றை மக்கள் இருக்கும் இடத்திலிருந்தே காணும் வகையில், கீழடி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் காண மெய்நிகர் சுற்றுலாவை உருவாக்கி கீழடி இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை மக்கள் பாரக்கும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கீழடி ஆவணப்படம் மற்றும் கீழடி அருங்காட்சியகம் குறித்தான அனைத்து விவரங்களையும், இங்குக் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பெருமைவாய்ந்த பொருள்களையும் இந்த இணையதளத்தில் கண்டு மகிழலாம்.

வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகம் என்ற அறிமுகத்துடன் இந்த இணையதளத்தை பார்வையிடலாம். இங்கு கீழடியின் செயலி, அது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகள், அகழாய்வுகள் பற்றிய தகவல்களை மக்கள் அறிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தண்ணீரில் பிரசவம்...

ஒரு கோயில்: இரு நாடுகளின் சண்டை

பெண்கள் அழகாய் இருக்க..

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

SCROLL FOR NEXT