கோப்புப் படம் 
தமிழ்நாடு

குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள்!

குடியரசு நாளையொட்டி ஜன. 24,26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

DIN

குடியரசு நாளையொட்டி ஜன. 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து நாளை (ஜன. 24) இரவு 10.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் நள்ளிரவு 12 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

மறுமார்க்கமாக ஜன.26 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

சென்ட்ரலில் இருந்து நாளை (ஜன. 24) இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மாலை 6.05 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும்.

மறுமார்க்கமாக ஜன.26 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் பகல் 2 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | இரும்புக் காலம்: இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து எழுதப்படுவதற்கான அச்சாணி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனவு நனவானது!

சபரிமலை சீசன்: போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து

"விக்' நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

SCROLL FOR NEXT