வேங்கைவயல் 
தமிழ்நாடு

வேங்கைவயல் விவகாரத்தில் 3 பேருக்குத் தொடர்பு: தமிழக அரசு

வேங்கைவயல் விவகாரத்தில் 3 பேருக்குத் தொடர்பு இருப்பதாக தமிழக அரசு தகவல்

DIN

சென்னை: வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் மூன்று பேருக்கு தொடர்பிருப்பதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. அதில், மூன்று பேர் மீது குற்றம்சாட்டி, சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.

வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த சுதர்சன், முத்துக்கிருஷ்ணன், முரளிராஜா ஆகிய மூன்று பேருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதாகவும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முரளி ராஜா பொய் தகவலை பரப்பியதாகவும், சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் மேல்நிலைத் தொட்டி மீது ஏறி மனிதக் கழிவை தண்ணீரில் கலந்ததாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணை நடத்தி வந்த நிலையில், 750 நாள்களுக்குப் பிறகு புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்து சுமார் இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், முடுக்காட்டு ஊராட்சித் தலைவரின் கணவர் முத்தையாவை பழிவாங்கும் நோக்கில் இந்த சம்பவம் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழக அரசின் பதிலை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். வேங்கைவயல் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு விசாரணை பிற்பகலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022 டிசம்பா் 26ஆம் தேதி தெரியவந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரக்கோணம் அருகே தாய், மகன் தற்கொலை

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

முன்னாள் ராணுவ வீரா் மீது ஆட்டோ ஓட்டுநா்கள் தாக்குதல்

திண்டுக்கல்லில் 80 மி.மீ. மழை

தில்லி அரசு மருத்துவமனை ஊழியா்களின் பிரச்னைகளை களைய அமைச்சா் உறுதி

SCROLL FOR NEXT