டி20 கிரிக்கெட் போட்டிக்கு செல்வோர் நாளை மின்சார ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து இடையே டி-20 கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை (ஜன. 25) நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் டி20 கிரிக்கெட் போட்டிக்கு செல்வோர் நாளை மின்சார ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் மின்சார ரயிலில் இலவசமாக பயணம் மேற்கொள்ள கிரிக்கெட் டிக்கெட் வைத்திருப்பது அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே மற்றொரு அறிக்கையில், கிரிக்கெட் போட்டியை பாா்த்துவிட்டு வீடு திரும்புவோருக்கு வசதிக்காக 2 சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.