தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 
தமிழ்நாடு

தவெக மாவட்ட நிர்வாகிகளை தனித்தனியே சந்திக்கும் விஜய்!

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை பற்றி...

DIN

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் தனித்தனியாக சந்தித்துப் பேசவுள்ளார்.

அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக விஜய் அறிவித்துள்ள நிலையில், கட்சியின் உள்கட்டமைப்பை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் நூறுக்கும் மேற்பட்ட மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு செயலாளர்களை நியமிக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

முன்னதாக மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு தவெகவின் மாநில பொறுப்பாளர்கள் ரூ. 15 லட்சம் வரை பணம் பெறுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதையடுத்து, மாவட்ட பொறுப்புகளுக்கு பணம் பெறும் நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று பொதுச் செயலர் ஆனந்த் வாயிலாக விஜய் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், தவெக மாவட்ட பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை தனித்தனியே சந்தித்து இன்று விஜய் பேசவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இன்று மாலையே இறுதிப்படுத்தப்பட்ட மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் பெயர் பட்டியலை தவெக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தவெக 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுவதற்கான ஆலோசனை கூட்டத்திலும் விஜய் இன்று பங்கேற்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

கூடலூரில் பூக்கத் தொடங்கிய குறிஞ்சி மலர்கள்!

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

SCROLL FOR NEXT