சாலை மறியல் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் 
தமிழ்நாடு

சாலை மறியல்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது!

மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

DIN

மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

மதுரை திருமங்கலம் -கொல்லம் சாலையில் 4 வழிச் சாலை பணிகளால் விபத்துகள் அதிகமாக நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் விபத்துகளைத் தவிர்க்க சுரங்கப்பாதை அமைக்கக் கோரி 300-க்கும் மேற்பட்ட மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு சாலை மறியலில் ஈடுபட்டார்.

பின்னர் காவல்துறை வந்த பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாததால் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களுடன் ஆர்.பி. உதயகுமாரும் கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

மிகக்குறைந்த வயதில் எம்மி விருதை வென்ற அடோலசென்ஸ் நடிகர்!

விஜய்யை எம்ஜிஆருடன் ஒப்பிட வேண்டாம்: சி. விஜயபாஸ்கர்

அதிமுகவில் தலைவர்கள் இணையவில்லை என்றால்..! - ஓபிஎஸ் பேட்டி

SCROLL FOR NEXT