கோப்புப்படம் 
தமிழ்நாடு

அண்ணா நினைவு நாள்: பிப். 3 முதல்வர் தலைமையில் அமைதிப் பேரணி!

அண்ணா நினைவு நாள் அமைதிப் பேரணி...

DIN

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான அண்ணாதுரையின் நினைவு நாளையொட்டி, திமுக சார்பில் பிப். 3ஆம் தேதி அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது.

மறைந்த அண்ணாதுரையின் 56-ஆவது நினைவு நாள், வருகின்ற பிப்ரவரி 3 ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் சென்னை மாவட்ட திமுக வெளியிட்ட அறிக்கையில்,

“அண்ணாவின் 56வது நினைவு நாளினையொட்டி, முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருனாளர் டி.ஆர்.பாலு மற்றும் திமுக நிர்வாகிகள் பிப்ரவரி - 3, திங்கள்கிழமை காலை 7.00 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.

இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும்.

திமுக அமைச்சர்கள், நாடாளுமன்றம் - சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அஞ்சலி செலுத்த வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT