கோப்புப்படம் 
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 7 மாவட்டங்களில் மழை!

இரவு 7 மணி வரை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

இணையதளச் செய்திப் பிரிவு

அடுத்த 3 மணி நேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாள்களாகவே பகல் நேரத்தில் வெப்பம் சுட்டெரித்தும், மாலை நேரத்தில் மிதமான மழை பெய்தும் வருகிறது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று(ஜூலை 3) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) நீலகிரி, தென்காசி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சித்தோட்டில் 227 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்

அம்மாபேட்டை அருகே ஆடு திருட முயன்ற 3 போ் கைது

மீன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

ஈரோடு ஆருத்ரகபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT