தவெக செயற்குழுக் கூட்டம் TVK
தமிழ்நாடு

பரந்தூர், என்எல்சி, இருமொழிக் கொள்கை... தவெகவின் 20 தீர்மானங்கள் என்னென்ன?

தவெக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பரந்தூர் விமான நிலையம், இருமொழிக் கொள்கை உள்ளிட்ட தமிழகத்தின் பிரச்னைகள் குறித்து தவெக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய்தான், கூட்டணி குறித்து முடிவெடுக்க அவருக்கே முழு அதிகாரம் என்றும் தவெக தலைவர் விஜய் வருகிற செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் வரை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார், ஆகஸ்ட் மாதம் தவெக 2-வது மாநில மாநாடு நடைபெறும் என செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கட்சியில் தொண்டர்களைச் சேர்ப்பது, கொள்கை விளக்கக் கூட்டங்கள், பூத் கமிட்டி ஆகியவை குறித்து பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து இந்த கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

1. பரந்தூர் மக்கள் உள்பட விவசாயிகளின் நலன் மற்றும் உரிமைக்காகத் தமிழக வெற்றிக் கழகம் என்றும் துணை நிற்கும்.

2. கொள்கை எதிரிகளுடனோ, பிளவுவாத சக்திகளுடனோ என்றும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை.

3. விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிரான அரசின் அதிகார மீறலைக் கண்டிக்கிறோம்! மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

4. நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

5. பெரும் நட்டத்தை சந்தித்துள்ள மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை தேவை.

6. மலைக்கோட்டை மாநகரில் நடக்கும் மணல் கொள்ளை தடுக்கப்பட வேண்டும்!

7. என்எல்சி-க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு முழுமையான இழப்பீட்டுத் தொகை, குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக்க வலியுறுத்தி தீர்மானம்.

8. விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கைகளை முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றக்கோரி தீர்மானம்.

9. திண்டுக்கல் மாவட்டத்தில் வாசனைத் திரவிய ஆலை தொடங்கக் கோரும் தீர்மானம்.

10. தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.

11.ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு.

12. அரசு மருத்துவர்களை நம்ப வைத்து ஏமாற்றாமல், கொடுத்த வாக்குறுதியின்படி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!

13. தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிந்தரத் தீர்வு காண கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் ஒன்றிய அரசு கேட்டுப் பெற வேண்டும்!

14. இருமொழிக் கொள்கை தீர்மானம்.

15. தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) நடத்துவதன் வாயிலாக சிறுபான்மையினர் வாக்குகளை குறைக்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

16. கீழடியில் தமிழர் நாகரிகத்தை மூடி மறைக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்.

17. த.வெ.க.விற்கு எதிரான கபட நாடக தி.மு.க. அரசின் அராஜகப் போக்கிற்குக் கண்டனம்.

18. தொகுதி மறுசீராய்வு - ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம்.

19. காவல் துறை விசாரணையின் போது தொடர்ந்து பலர் கொல்லப்படுவதற்கும் அதனைத் தடுக்கத்தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத உள்துறை அமைச்சருக்கும் கண்டனம்.

20. பெரியார், அண்ணாவை அவமதிக்கும் பா.ஜ.க.வின் பிளவுவாத அரசியலைக் கண்டிக்கும் தீர்மானம்.

Resolutions passed at the TVK Executive meeting which held today at party HQ panaiyur, chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிப்பா் லாரி மோதி காய்கறி வியாபாரி பலி

புள்ளம்பாடி, புதிய கட்டளைமேட்டு வாய்க்காலுக்கு நாளை தண்ணீா் திறப்பு

திருச்சி ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளா் பொறுப்பேற்பு

ராமதாஸ் தலைமையில் கட்சிப் பணி: பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம்

திருச்சியிலிருந்து சென்னை மாதவரத்துக்கு 2 குளிா்ச்சாதனப் பேருந்துகள் இயக்கம்

SCROLL FOR NEXT