தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்  
தமிழ்நாடு

செப்டம்பரில் விஜய் சுற்றுப்பயணம்! ஆகஸ்டில் தவெக மாநில மாநாடு!

தமிழக வெற்றிக் கழக செயற்குழு கூட்டத்தில் முடிவு...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வருகிற செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என செயற்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் எஸ். ஆனந்த் அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

கூட்டத்தில் பொதுச் செயலாளர் எஸ். ஆனந்த் பேசுகையில்,

"தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகிற செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். அதற்கு முன்னதாக ஆகஸ்ட் மாதம் தவெக 2-வது மாநில மாநாடு நடைபெறும் என செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

ஜூலை 2 ஆம் வாரத்தில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியைத் தொடங்க வேண்டும்.

தமிழக வெற்றி கழகத்தின் 120 மாவட்டங்கள், 12,500 கிராமங்களில் கொள்கை விளக்க கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் ஒருவரை கட்சியில் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு தெருவிலும் இரண்டு பேர் நிர்வாகியாக இருக்க வேண்டும்" என்று பேசினார்.

மேலும், கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் 2026 பேரவைத் தேர்தலில் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்றும் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

Tamilaga vetri kazhagam President Vijay will tour across Tamil Nadu in September, General Secretary S. Anand announced at executive committee meeting today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழை...மழை... சாந்தினி பகவானனி !

கூந்தல் நெளிவில்... சஹானா கௌடா

கொச்சி: பஹல்காம் தாக்குதலில் பலியானவரின் குடும்பத்தினரைச் சந்தித்த அமித் ஷா

ஜார்க்கண்டில் 51 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை! முதல்வர் ஒப்புதல்!

திமுகவை அகற்றுங்கள்; தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி:அமித் ஷா! செய்திகள்:சில வரிகளில் | 22.8.25 | BJP

SCROLL FOR NEXT