அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  X
தமிழ்நாடு

கூட்டணியில் இணைய தவெகவுக்கு இபிஎஸ் மறைமுக அழைப்பு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என நினைக்கும் கட்சிகள் எல்லாம் ஓரணியில் இணைய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச் செயலரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஜூலை 7 ஆம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து பயணத்தைத் தொடங்குகிறார். இந்த சுற்றுப்பயணத்திற்கான லோகோ மற்றும் பாடலை இன்று வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இபிஎஸ், "அதிமுக - பாஜக கூட்டணி குறித்து விஜய் விமர்சனம் செய்திருக்கிறார். அனைத்து கட்சிகளுமே தாங்கள் வளர வேண்டும் என விமர்சனம் செய்வது இயல்பு" என்றார்.

'திமுக - பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று விஜய் கூறியிருக்கிறார், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று அவர் நேரடியாகச் சொல்லவில்லை' என செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த இபிஎஸ்,

"இந்த கேள்வியை விஜய்யிடம்தான் கேட்க வேண்டும். மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அதில் ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் இணைந்து தேர்தலிலே கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.

திமுக அகற்றப்பட வேண்டும் என்று யார் யாரெல்லாம் நினைக்கிறார்களோ அவர்களோடு கூட்டணி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவர்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் எங்களது கருத்து" என்று கூறினார்.

நேற்றைய கூட்டத்தில் திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று விஜய் கூறினாலும் அதிமுகவை நேரடியாகச் சொல்லவில்லை என்ற கருத்து பேசப்படுகிறது. தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் அதிமுக, பாஜக ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டி வருகிறது.

ஆனால் நவம்பருக்குப் பிறகே கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என தவெக தரப்பு கூறியிருக்கிறது. ஜனவரியில்தான் கூட்டணி அறிவிப்பு என தேமுதிகவும் கூறியிருக்கிறது.

அதனால் தமிழ்நாட்டில் நவம்பருக்குப் பிறகே கூட்டணி குறித்த இறுதி முடிவுகள் தெரிய வரும்.

AIADMK General Secretary Edappadi Palaniswami has said that all parties that want to overthrow the DMK government should unite.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகே, அமுதே... அஞ்சலி நாயர்!

சமூக வலைதளங்கள் மூலம் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு: தாக்குதல் நடத்த சதி! -என்ஐஏ விசாரணை

நாட்டின் சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன் ரூ.40,000: இம்மாதம் வெளியாகிறது

ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 314 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

மலையாள சினிமாவின் புதிய முகம் Lokah! Universe-ன் துவக்கமும், எதிர்கால திட்டங்களும்!

SCROLL FOR NEXT