ஜம்மு-காஷ்மீரில் குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி ! போலீஸார் விசாரணை
ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமில் தனது சொந்த சர்வீஸ் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் ஒருவர் பலியானதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
54 ராஷ்டிரிய ரைபிள்ஸில் பணியமர்த்தப்பட்ட வீரர், சனிக்கிழமை இரவு ரஜோரி நகரத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் சோல்கி கிராமத்தில் உள்ள முகாமின் தலைமையகத்தில் பணியில் இருந்தபோது பலியானார்.
Advertisement
Advertisement
துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டதும் சக வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அங்கு வீரர் ஒருவர் பலியாகியிருப்பதைக் கண்டனர்.
ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தற்செயலாக அவரது துப்பாக்கியிலிருந்து குண்டு வெளியேறியதா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் மேலும் கூறினர்.
எனினும், அவரது மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய போலீஸார் விசாரணை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.
ரஷ்மிகாவின் தி கேர்ள்பிரண்ட் படத்தின் முதல் பாடல் எப்போது?
An army personnel died of a bullet injury from his own service rifle inside a camp in Rajouri district of Jammu and Kashmir, officials said on Sunday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.