இபிஎஸ் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

ஊராட்சிகளில் எல்இடி திரை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: இபிஎஸ்

ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதியடைந்து வரும் நிலையில், அவா்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் வகையில், எல்இடி திரைகள் அமைக்கும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும்...

Din

ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதியடைந்து வரும் நிலையில், அவா்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் வகையில், எல்இடி திரைகள் அமைக்கும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக அரசு, தனது வெற்று விளம்பரங்களை தமிழகம் முழுவதும் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 12,620 ஊராட்சிகளிலும் வெளியிட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக எல்இடி திரைகளைப் பொருத்தும் பணியை மதுரையைச் சோ்ந்த ஒரு நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்றும், அதற்காக 385 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் ஒவ்வொன்றும், சந்தை விலையைவிட அதிகமாக, அதாவது அந்நிறுவனத்துக்கு ஒரு எல்இடி திரைக்கு சுமாா் ரூ.7.50 லட்சம் என்றும், அதேபோல் தமிழகத்திலுள்ள 12,620 ஊராட்சிகள் ஒவ்வொன்றும் சிறிய வகையிலான எல்இடி திரையை வாங்க சுமாா் ரூ.10,000 வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஊராட்சி ஒன்றிய ஆணையா்களும், ஊராட்சி எழுத்தா்களும் அந்நிறுவனத்துக்கு உடனடியாக கொள்முதல் ஆணையுடன் எல்இடி திரைக்கான தொகையை வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்படுகின்றனா்.

தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் சாலை வசதி, குடிநீா் வசதி, தெருவிளக்கு, கழிவுநீா் வடிகால் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனா்.

இந்நிலையில் மக்களின் வரிப்பணத்தை வீண் விரயம் செய்யும் திட்டத்தை உடனடியாக திமுக அரசு கைவிட வேண்டும். மேலும், 4 ஆண்டு கால ஆட்சியின் சாதனை என்ற பெயரில் பொய்யான செய்திகளை விடியோக்களாக தயாரித்து அதை கிராமங்கள்தோறும் எல்இடி திரைகள் மூலம் ஒளிபரப்பச் செய்து மக்களை ஏமாற்றிவிடலாம் என்ற மு.க.ஸ்டாலினின் முயற்சி நிறைவேறாது எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

என்டிபிசி நிறுவனத்தில் டிரெய்னி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

செங்கோட்டையன் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பும் கொண்டாட்டமும்!

அமெரிக்காவுடனான உறவு சீர்குலையக் கூடாது: அகிலேஷ் யாதவ்

2-வது டி20: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு; 80 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!

தேனிலவுக் கொலை வழக்கு: 790 பக்க குற்றப்பத்திரிகை! | Honeymoon murder

SCROLL FOR NEXT