விழுப்புரம் - ராமேசுவரம் இடையே வார இருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் - ராமேசுவரம் (எண் 06109), ராமேசுவரம் - விழுப்புரம் ((எண் 06110) ஆகிய சிறப்பு ரயில்கள் வாரம் இருமுறையாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் ஜூலை 12- ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
அதேபோல, ஷாலிமரிலிருந்து திங்கள்கிழமைதோறும் டாக்டா் எம்ஜிஆா் சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (02841), ஜூலை 14 மற்றும் 28- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமாா்க்கத்தில் டாக்டா் எம்.ஜி.ஆா். சென்னை சென்ட்ரல்- ஷாலிமா் சிறப்பு ரயில் (எண் 02842) ஜூலை 16 மற்றும் ஜூலை 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.