அஜித்குமார் 
தமிழ்நாடு

அஜித்குமார் மரண வழக்கு: விசாரணை அறிக்கை தாக்கல்!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் காவல் மரண வழக்கு பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் காவல் மரண வழக்கில் மதுரை மாவட்ட நீதிபதி தனது விசாரணை அறிக்கையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று தாக்கல் செய்தார்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், காவல்துறை விசாரணையில் மரணமடைந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு விசாரித்து வரும் நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், கடந்த ஜூலை 2-ம் தேதி முதல் விசாரணை மேற்கொண்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

மேலும் அஜித்குமார் கொலை தொடர்பான பல்வேறு வழக்குகள் இன்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், அஜித்குமார் மரண வழக்கை நீதிமன்றம் கண்காணிக்கும் எனவும் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் மீதி விசாரணையை சிபிஐ மேற்கொள்ளும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிமன்ற பதிவாளர் வழக்கு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் சிபிஐ அதிகாரிகளிடம் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Madurai District court Judge filed his investigation report in Madras High Court today in ajithkumar custodial death case

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சநாதன தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்களை நிராகரிக்கும் அரசு ஆட்சிக்கு வராது..! - அமித் ஷா

கடைசி ஒருநாள்: ஹாரி ப்ரூக், ஜோ ரூட் சதம் விளாசல்; இலங்கைக்கு 358 ரன்கள் இலக்கு!

பந்தன் வங்கி சேமிப்புக் கணக்கு இருப்பு தொகை குறைப்பு!

"தொடரும் சிக்கல்; ஜன நாயகன் வெளியீடு எப்போது?": பத்திரிகையாளர் ப்ரியன்

இந்தியாவுடன் ஒப்பந்தம் : அனைத்து வணிக ஒப்பந்தங்களுக்கும் தாய்! ஐரோப்பிய யூனியன்

SCROLL FOR NEXT