கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில், ரயில்வே வெளியிட்ட அறிக்கைக்கு முரணான கருத்தை வேன் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளுடன் ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் பலியான நிலையில், பள்ளி வேன் ஓட்டுநர் மற்றும் இரண்டு மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ரயில்வே அறிக்கை
இந்த விபத்து குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட விளக்க அறிக்கையில் முரண்பாடு இருந்தது.
முதலில் வெளியிட்ட அறிக்கையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கேட்டை மூடுவதற்கு முற்பட்டபோது, வேன் ஓட்டுநர் கேட்டதால் வாகனத்தை அனுமதித்ததாகக் கூறப்பட்டது.
பின்னர், திருத்தப்பட்ட இரண்டாவது அறிக்கையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கேட்டை மூடியதாகவும் வேன் ஓட்டுநர் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதால் மீண்டும் கேட்டை திறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
வேன் ஓட்டுநர் பேட்டி
இந்த விபத்து குறித்து பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் (வயது 48) விளக்கம் அளித்துள்ளார்.
"ரயில்வே கேட் மூடப்படவில்லை, திறந்துதான் இருந்தது. கேட் கீப்பர் அந்த இடத்தில் இல்லை, ரயிலின் ஹாரன் சப்தமும் கேட்கவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வரும் மாணவர் விஸ்வேஷும் ரயில்வே கேட் திறந்து இருந்ததை உறுதி செய்துள்ளார்.
வேன் ஓட்டுநரே கேட்டிருந்தாலும் ரயில் வருவது தெரிந்தும் கேட்டை திறந்தது கேட் கீப்பரின் தவறு என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பங்கஜ் சர்மாவை ரயில்வே நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ள நிலையில், தமிழக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.