முகப்பு
தமிழ்நாடு

தாம்பரம் - திருச்சி ரயில் தாமதமாக புறப்படும்: 3 ரயில்கள் பகுதியளவு ரத்து!

தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில் இன்று தாமதமாக புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 8 ஜூலை 2025, 2:48 pm IST
ரயில் - பள்ளி வேன் விபத்தில் அறுந்து விழுந்த உயர் மின் அழுத்த கம்பியை சரிசெய்யும் ஊழியர்கள். - EPS
பகிர்:

கடலூர் ரயில் விபத்தை தொடர்ந்து மூன்று ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில் இன்று தாமதமாக புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 மாணவர்கள், 1 மாணவி உள்பட மூவர் பலியாகினர்.

ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வாகன ஓட்டுநர், 2 பள்ளி மாணவர்கள் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், விபத்து ஏற்பட்ட பகுதியில் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பகுதியளவு ரத்தான ரயில்கள்

ரயில் எண் : 56808 - திருவாரூர் - விழுப்புரம் பயணிகள் ரயில் ஆலப்பாக்கத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது.

ரயில் எண் : 16232 - மைசூரு - கடலூர் துறைமுகம் விரைவு ரயில் புதுசத்திரத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது.

ரயில் எண் : 06190 - திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் சிதம்பரத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தாம்பரத்தில் இருந்து திருச்சி நோக்கி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட இருந்த ரயில் எண். 06191, ஒன்றரை மணிநேரம் தாமதமாக 5 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே அறிக்கை
summary

Three trains have been partially cancelled following the Cuddalore train accident. It has been reported that the Tambaram - Trichy special train will depart late today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.