கோப்புப்படம் 
தமிழ்நாடு

கடலூர் ரயில் விபத்து: நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள் விவரம்!

சிதம்பரம் வழியில் செல்லும் ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்...

இணையதளச் செய்திப் பிரிவு

கடலூர் ரயில் விபத்தை தொடர்ந்து முக்கிய ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது.

கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 மாணவர், 1 மாணவி உள்பட மூவர் பலியாகினர்.

ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வாகன ஓட்டுநர், 2 பள்ளி மாணவர்கள் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், விபத்து பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவ்வழியாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06190) சிதம்பரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 3 மணிநேரத்துக்கு மேல் தாமதமாகியுள்ளது.

அதேபோல், மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்துக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் ஆலப்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Following the Cuddalore train accident, major trains have been stopped midway.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேஜிஎஃப் பிரபலம் தினேஷ் மங்களூரு காலமானார்!

பட்டாம்பூச்சி... ரிது சௌத்ரி

நெஞ்சாங்கூட்டில்... காவ்யா அறிவுமணி

' அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையுடன் கல்வித் துறையை நடத்தி வருகிறோம் '

ஹோட்டலுக்குள் நுழைந்து சுற்றிப்பார்த்த காட்டு யானைகள்!

SCROLL FOR NEXT