கடலூர் ரயில் விபத்து | உள்படம்: கேட் கீப்பர் பங்கஜ் சர்மா. 
தமிழ்நாடு

கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர் பணியிடை நீக்கம்!

கடலூர் ரயில் விபத்து காரணமாக கேட் கீப்பர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

கடலூர் ரயில் விபத்து காரணமாக கேட் கீப்பர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில், சின்ன காட்டு சாகை சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த திராவிட மணி மகள் சாருமதி (16), மாணவர் விமலேஷ்(10) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஓட்டுநர் சங்கர்(47), தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த விஷ்வேஸ் (16), நிவாஸ்(13), சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த மாணவர் செழியன்(15) ஆகியோர் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தை பார்க்கவந்த அண்ணாதுரை (55) சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தக் கோர விபத்துக்கு ரயில் கேட் கீப்பர் தூங்கியதே அலட்சியம்தான் முழுக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இவ்விபத்துக்கான காரணம் என்ன என்பதைப் பற்றி தெற்கு ரயில்வே சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ரயில் வருவது தெரிந்தும் வேன் டிரைவர் கூறியதை கேட்டு ரயில்வே கேட்டை திறந்ததே விபத்திற்கு காரணம் என தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.

மேலும், செம்மங்குப்பம் லெவல் கிராசிங்கில் ரயில்வே கேட்டை உரிய நேரத்தில் மூடாத மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தஞ்சை, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய ரயில்கள் இந்த வழியே செல்ல முடியாததால், இவ்வழியான ரயில் போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.

ரயில் வே துறை தரப்பில், “வேன் போகும் வரை கேட்டை மூட வேண்டாம் என ஓட்டுநர் கூறினார் என்றும், இதேபோன்று கேட்டை மூடி கொண்டிருக்கும்போது, வேன் ஓட்டுநர் அந்த வழியாக அத்துமீறி சென்றார் என்றும் கூறப்படுகிறது.

கேட் கீப்பர் பணியின்போது தூங்கியதே விபத்துக்கான காரணம் என பொதுமக்கள் கூறி வரும் நிலையில், ரெயில்வே மாறுதலாக விளக்கம் அளித்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. கேட் கீப்பர் தவறு செய்திருந்தது உறுதியானால் பணியில் இருந்து நீக்கப்படுவார் என ரயில்வே தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The gatekeeper has been suspended due to the Cuddalore train accident.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யோலோ டீசர்!

மோடியின் பட்டப்படிப்பு விவகாரம்: உத்தரவை ரத்து செய்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பு!

குடியரசுத் தலைவருடன் ஃபிஜி பிரதமர் சந்திப்பு!

வீட்டுக் காப்பீட்டை அறிமுகப்படுத்தும் போன்பே!

உத்தரகண்ட்: தொடரும் நிலச்சரிவுகளால் தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்!

SCROLL FOR NEXT