கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்துக்கான காரணம் குறித்து தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.
கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் மீது விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் மோதி விபத்துக்குள்ளானது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியுள்ளது.
ரயில் மோதியதில் பள்ளி வேன் 50 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்ததில் மாணவி சாருமதி (15), மாணவர் விமலேஷ்(10) ஆகியோர் பரிதாபமாக பலியாகினர்.
இதில், ஓட்டுநர் சங்கர்(48), தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த விஸ்வேஷ், சுப்பரமணியபுரத்தைச் சேர்ந்த மாணவர் செழியன் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் கேட் கீப்பர் அலட்சியாமாக செயல்பட்டு தூங்கியதே விபத்துக்கு காரணம் எனக் கூறி பொதுமக்கள் சரமாரியான தாக்குதல் நடத்தினர்.
மேலும், இந்தச் சம்பவத்துக்கான காரணம் குறித்து ரயில்வே தரப்பில் கூறப்படும்போது, “கேட் கீப்பர் கேட்டை மூட முயற்சித்தபோது, தண்டவாளத்தைக் கடந்து சென்றுவிடுகிறேன் என ஓட்டுநர் வற்புறுத்தி சென்றதே விபத்துக்கு காரணம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.