விபத்து நடந்த பகுதியும், புதிய கேட் கீப்பர் ஆனந்த்ராஜும்.. 
தமிழ்நாடு

ரயில் விபத்து எதிரொலி: செம்மங்குப்பத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த புதிய கேட் கீப்பர்!

செம்மங்குப்பத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த புதிய கேட் கீப்பர் நியமிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த புதிய கேட் கீப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில், நேற்று(ஜூலை 8) காலை ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். இந்த விபத்தில், சாருமதி (16), விமலேஷ் (10), செழியன் (15) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்துக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படும் கேட் கீப்பராக இருந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மாவின் கவனக்குறைவால்தான் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கருதிய மக்கள் அவரை சரமாரியதாகத் தாக்கினர்.

பலத்த காயமடைந்தவரை மீட்ட காவல் துறையினர், அவரை கைது செய்த நிலையில், ரயில்வே மேலாளர், பங்கஜ் சர்மாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், பங்கஜ் சர்மா மீது கொலை வழக்கு, மரணத்திற்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 5 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவருக்கு மொழி புரியாததால் ஏற்பட்ட கவனக்குறைவாலேயே இந்த விபத்து நேரிட்டதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்தவரை புதிய கேட் கீப்பராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், செம்மங்குப்பம் பகுதிக்கு இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்த்ராஜ் புதிய கேட் கீப்பராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Train accident: Gatekeeper from Tamil Nadu to Chemmankuppam!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி.யில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதல்: 8 பேர் பலி, 43 பேர் காயம்

வாய்ப்புகள் தேடிவரும் விருச்சிக ராசிக்கு: தினப்பலன்கள்!

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

SCROLL FOR NEXT