மகளுக்கு கட்சியில் பதவி வழங்கப்படுமா? அன்புமணியுடன் இணைவீர்களா, எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது போன்ற பல கேள்விகளுக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரே பாடல் மூலம் பதிலளித்துள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், செய்தியாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு போகப் போக தெரியும் என்ற ஒரே பாடல் மூலம் பதிலளித்தார்.
ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இருவரும் இணைவீர்களா என்று செய்தியாளர் கேட்டதற்கு, போகப் போக தெரியும் என்று பாடலைப் பாடினார்.
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, போகப் போக தெரியும் என்று தெரிவித்தார்.
உங்கள் கூட்டத்தில் அன்புமணி புகைப்படம் இடம்பெற்றுள்ளது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ம.க. ஸ்டாலினின் பாசம் விடவில்லை என்றார்.
இரண்டாக உள்ள பாமக தலைமை ஒன்றாக இணைந்தால் கண்ணுக்கு நன்றாக இருக்கும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச் ராஜா தெரிவித்துள்ளார் என கேட்டதற்கு, அது அவரது ஆசை என்றார் ராமதாஸ்
அந்த ஆசை நிறைவேறுமா? என மீண்டும் கேட்டதற்கு போகப் போகத் தெரியும் என பாட்டு பாடினார்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பீர்கள் என கேட்டதற்கு அதற்கும் போகப் போக தெரியும் என பாட்டு பாடி பதில் சொன்னார் ராமதாஸ்.
ராமதாஸ் - அன்புமணி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட பின் மருத்துவர் ராமதாஸ் பொது இடத்தில் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க.. வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம்: ஆதார் உள்ளிட்டவற்றை சேர்க்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.