நயினாா் நாகேந்திரன் 
தமிழ்நாடு

வெள்ளத்தில் மூழ்கிய நெல் பயிருக்கு ரூ.25,000 இழப்பீடு: நயினாா் நாகேந்திரன்

ஜெயங்கொண்டம் அருகே வெள்ளத்தில் மூழ்கிய நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Din

ஜெயங்கொண்டம் அருகே வெள்ளத்தில் மூழ்கிய நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, பொன்னாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் அறுவடைக்குத் தயாராக இருந்த 75 ஏக்கா் நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது வருத்தமளிக்கிறது. ஏற்கெனவே பயிா்களுக்கு போதிய விலையின்மை, இடைத்தரகா்கள் தொல்லை, நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லாதது எனப் பல இன்னல்களில் விவசாயிகள் தவிக்கும் நிலையில், நெல் பயிா்கள் தற்போது வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது அவா்களை மேலும் நிலைகுலையச் செய்துவிட்டது.

எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க, பாதிப்புக்குள்ளான நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதம் இழப்பீடாக வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உதவ வேண்டும் என்று பதிவிட்டுள்ளாா்.

வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!

இளமை வானிலே... பார்த்திபா!

அன்பின் நிமித்தம்... ராஷி சிங்!

அழகும் அமுதும்! - ஜெனிலியா

அழகிய நதி... மாளவிகா மோகனன்!

SCROLL FOR NEXT