'ஓரணியில் தமிழ்நாடு' வார் ரூமை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்.  X
தமிழ்நாடு

அதிமுக - பாஜக கூட்டணி ஒரு சதித்திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

அதிமுக - பாஜக கூட்டணி பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்...

இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுபற்றி முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய விருப்பமுள்ளதா என்று கேட்கும்போது,

'அரசின் திட்டங்கள் அன்றாட வாழ்விலும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பயனளிக்கிறது. அதேசமயம் அ.தி.மு.க. - பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டு என்பது, கூட்டணியல்ல; தமிழ்நாட்டை - தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைத்து, மீண்டும் நூறாண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளுவதற்கான சதித்திட்டம் என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்' என்று தெளிவாக எடுத்துச் சொல்லி 'ஓரணியில் தமிழ்நாடு' என இணைகின்றனர் தமிழ்நாட்டு மக்கள்.

இந்த முன்னெடுப்பைக் கண்காணிப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அமைத்துள்ள 'வார் ரூம்' - ஐத் திறந்து வைத்தேன்.

விறுவிறுவென நடைபெற்று வரும் இந்த பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

அதிகபட்சமாக, கரூர் மாவட்டக் கழகத்தினர் 41% வாக்காளர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து முன்னணி வகிக்கின்றனர். அவர்களை முந்தும் வகையில் பிற மாவட்டக் கழகத்தினரும் மும்முரம் காட்டிடக் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி

'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியிருப்பது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கூட்டணி மட்டும்தான் ஆட்சியில் பாஜகவுக்கு பங்கு இல்லை என்று அதிமுகவினர் கூறிவந்த நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று அமித் ஷா கூறியுள்ளார்.

அமித் ஷா சொல்வதே இறுதியானது என்று பாஜகவினர் கூறிவரும் நிலையில், 'தமிழ்நாட்டில் அதிமுக தனித்து ஆட்சியமைக்கும்' என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Chief Minister M.K. Stalin has criticized AIADMK-BJP alliance as a conspiracy to destroy the unity of Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் வியூகம் வெற்றி பெறுமா? - அா்ஜுன் சம்பத்

மீட்புப் பணி போட்டி: முதலிடம் பெற்ற ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டு

இளைஞா் கொலை வழக்கு: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது

அரையிறுதியில் ஜோகோவிச் - அல்கராஸ் பலப்பரீட்சை

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை

SCROLL FOR NEXT