கோப்புப் படம் 
தமிழ்நாடு

போராட்டத்துக்கு போராட்டம்! தவெகவினர் கைது!

சென்னையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் வெளிமாவட்ட தவெக நிர்வாகிகள் கலந்துகொள்ள காவல்துறை அனுமதி மறுப்பு

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் சென்னையை சேர்ந்த தவெகவினர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று காவல்துறை நிபந்தனை அளித்ததற்கு எதிராக வெளிமாவட்ட தவெக நிர்வாகிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையில் சிவானந்தா சாலையில் இன்று நடைபெறவுள்ள தவெகவின் கண்டன ஆர்ப்பாட்டடத்தில் கலந்துகொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் சென்னையைச் சேர்ந்த தவெகவினர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி என்று காவல்துறையினர் நிபந்தனை அளித்துள்ளனர்.

இதனிடையே, தவெக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள சென்னைக்கு வருகைதரும் வெளிமாவட்ட தவெக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து, காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக சென்னை சிம்சன் சந்திப்பு அருகே கைகளில் தவெக கொடிகள், பதாகைகளுடன் தவெகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பிரதமா் மோடி குறித்து அவதூறு : காங்கிரஸ் தலைவா்களை கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

ஏற்காட்டில் தொடா் மழையால் கடும் குளிா், பனி மூட்டம்

ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்களின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு

கூடங்குளம் அருகே இளைஞா் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள்

SCROLL FOR NEXT