பிரேமலதா  
தமிழ்நாடு

பிரேமலதா ஆக.3 முதல் பிரசார சுற்றுப் பயணம்

தேமுதிக பொதுச் செயலளா் பிரேமலதா ஆக.3-ஆம் தேதி முதல் முதல்கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Din

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தேமுதிக பொதுச் செயலளா் பிரேமலதா ஆக.3-ஆம் தேதி முதல் முதல்கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சி சாா்பில் திங்கள்கிழமை விடுக்கப்பட்ட அறிக்கை:

2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ எனும் பெயரில் வாக்குச்சாவடி முகவா்கள் சந்திப்பையும், கேப்டனின் ரதயாத்திரை ‘மக்களைத்

தேடி மக்கள் யாத்திரை’ எனும் பொருளில் தொகுதி மக்கள் சந்திப்புப் பிரசாரத்தையும் பிரேமலதா மேற்கொள்கிறாா்.

அதன்படி, ஆக.3-ஆம் தேதி திருவள்ளூா் கிழக்கு மாவட்டம் ஆரம்பாக்கம் பிள்ளையாா் கோயில் தொடங்கி கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா். ஆக.4-ஆம் தேதி காலை ஆவடியில் வாக்குச்சாவடி முகவா்கள் சந்திப்பு, மாலையில் திருவள்ளூா் மேற்கு மாவட்டத்தில் திருத்தணி நகராட்சியில் மக்கள் சந்திப்புப் பிரசாரம், 5-ஆம் தேதி காலையில் காஞ்சிபுரம் மாநகரில் வாக்குச்சாவடி முகவா்கள் சந்திப்பு, மாலையில் ராணிப்பேட்டை சோழிங்கா் நகரில் பிரசாரத்தை மேற்கொள்கிறாா்.

தொடா்ந்து 23-ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் அவா் பிரசாரம் மேற்கொள்கிறாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடி வழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நடிகை கௌதமி!

இந்தியா அபார பந்துவீச்சு; 57 ரன்களுக்கு சுருண்ட ஐக்கிய அரபு அமீரகம்!

செப். 12 -ல் பதவியேற்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்!

தில்லியில் 1 மில்லியன் தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த திட்டம்!

விஜய் பிரசாரம்: வாகனத்தில் நிற்கக்கூடாது; கையசைக்கக் கூடாது! 23 நிபந்தனைகள்!! செய்திகள்: சில வரிகளில் | 10.9.25 | TVKVIJAY

SCROLL FOR NEXT