திமுகவின் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (ஜூலை 17) நீதிமன்றத்தில் ஆஜரானார்.
முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வெளியிட்ட “டி.எம்.கே. ஃபைல்ஸ்” எனும் குற்றச்சாட்டுகளில், தனக்கு எதிராகப் பொய்யான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவர் மீது திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
இதுகுறித்து, அவர் தொடர்ந்த வழக்கில், உரிய ஆதாரங்கள் இன்றி தனது பெயருக்கு தீங்கிழைக்கும் நோக்கில், அண்ணாமலை அவதூறு கருத்துக்களைப் பரப்பி வருவதாகக் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று (ஜூலை 17) வழக்கு விசாரணைக்காக அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால், டி.ஆர். பாலு ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் மூத்த தலைவர் டி.ஆர். பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ள பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அவர் வழக்கம்போல் நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்த்ததாக விமர்சித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.