மு.க. முத்து.  
தமிழ்நாடு

மு.க. முத்துவின் உடல் தகனம்!

சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் மு.க. முத்துவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் மு.க. முத்துவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (77) உடல்நலக்குறைவால் சென்னையில் சனிக்கிழமை காலமானார். வயது மூப்பு, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மு.க. முத்து சனிக்கிழமை காலை 8 மணியளவில் இறந்ததாக அவரது மனைவி தெரிவித்தார்.

மு.க. முத்துவின் உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், அவரது உடல் ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு முத்தமிழறிஞர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஸ்டாலினுக்கு அரசியலில் நல்ல எதிர்காலம்! 30 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிய மு.க. முத்து!

தனது சகோதரர் மு.க.முத்துவின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மு.க.முத்துவின் இறுதி ஊர்வலம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதையடுத்து சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

Karunanidhi's eldest son M.K. Muthu Cremated at Besant Nagar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப்: தில்லி அரசு ரூ. 5 கோடி நிதியுதவி

ஓணம் பரிசு... பூஜா!

10 நாள்களுக்கு ரயில்களின் இயக்கம் மாற்றம்! சென்னை மெட்ரோ அறிவிப்பு

பிரிட்டனின் முதல் முஸ்லிம் பெண் உள்துறைச் செயலர்! யார் இந்த ஷபானா மஹ்மூத்?

கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT