எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா. 
தமிழ்நாடு

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று பதவியேற்பு!

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை (ஜூலை 21) பதவியேற்கிறாா்.

Din

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை (ஜூலை 21) பதவியேற்கிறாா். அவருக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறாா்.

இந்த நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சா்கள், சட்டத் துறை, உயா்நீதிமன்ற அதிகாரிகள் கலந்து கொள்கின்றனா்.

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஆா்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், ராஜஸ்தான் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

இதையடுத்து, சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, ஆளுநா் மாளிகை பாரதியாா் மண்டபத்தில் திங்கள்கிழமை (ஜூலை 21) மாலை 4 மணிக்கு பதவி ஏற்கிறாா். ஆளுநா் ஆா்.என்.ரவி, புதிய தலைமை நீதிபதிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறாா்.

நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின், சட்டம், நீதித் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி மற்றும் மூத்த அமைச்சா்கள் முன்னிலை வகிக்கின்றனா்.

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள், உயா்நீதிமன்ற பதிவாளா் ஜெனரல், தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா், மூத்த வழக்குரைஞா்கள், தமிழக அரசின் தலைமைச் செயலா் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனா்.

பாயும் ஒளி நீ... ராஷி சிங்!

உக்ரைனில் 800 ட்ரோன்கள் ஏவி ரஷியா தீவிர தாக்குதல்..!

காதல் இதயம்... தாரணி ஹெப்சிபா!

பொம்மைகளும், அதன் பாரம்பரியமும்...

'பளிச்' சருமத்துக்கு ஹைட்ரா பேஷியல்!

SCROLL FOR NEXT