கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழ்நாட்டிற்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை! - இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கேரளம் மற்றும் கர்நாடகத்திற்கும் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாள்களுக்கு தமிழ்நாட்டிற்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The India Meteorological Department has issued an orange alert for very heavy rain in Tamil Nadu today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயில் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு

காரில் கஞ்சா கடத்தல்: இளைஞா் கைது இரு பெண்கள் மீது வழக்குப் பதிவு

புறவழிச்சாலையில் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு

நாளைய மின் தடை : ஒறையூா்

நாகை துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியா்கள்! விலை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT