தவெக தலைவர் விஜய் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு!

தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் தலைமையில் இன்று(ஜூலை 20) நடைபெறவிருந்த தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. புதிய கட்சியான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் மாநில மாநாடு, பூத் கமிட்டி மாநாடு, செயற்குழுக் கூட்டம் எனப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.

அதன் தொடா்ச்சியாக, தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை இன்று நடத்த அந்தக் கட்சியின் தலைமை திட்டமிட்டு இருந்தது.

இந்த மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்தும் வகையில் புதிய செயலியை தவெக தலைவர் விஜய் அறிமுகப்படுத்தப்பட இருந்தது.

இந்த நிலையில், செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் புதிய செயலி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வருகிற ஆக. 25-ஆம் தேதி மதுரையில் தவெக இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கையில் கடும் வெள்ளம்! தென்னை மரத்தில் சிக்கியவரை ஹெலிகாப்டரில் மீட்ட ராணுவம்!

வார பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும்!

விடியோவால் வந்த வினை! ரயிலில் நூடுல்ஸ் சமைத்த பெண்ணை கண்டுபிடித்த ரயில்வே!

டிட்வா புயல்: பள்ளி மாணவர்களுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு தேதி மாற்றம்!

கர்நாடகத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT