எடப்பாடி கே. பழனிசாமி  கோப்புப்படம்
தமிழ்நாடு

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல: இபிஎஸ்

அதிமுக ஆட்சி அமைந்தால் கூட்டணிக்கு பங்கு கொடுப்பது குறித்து இபிஎஸ் பேசியது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல என்றும் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியுள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்‘ என்ற முழக்கத்தோடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, திருத்துறைப்பூண்டியில் நேற்று(ஜூலை 19) பிரசாரம் மேற்கொண்டார்.

தஞ்சாவூர் - கோடியக்கரை சாலையில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் இபிஎஸ் பேசியதாவது:

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல, அதிமுக அதிக இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்களுக்கு கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும், வேண்டாம் என்றால் வேண்டாம். எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.

உங்களைப்போல(ஸ்டாலின்), வாரிசுக்காக ஆட்சிக்கு வர நினைக்கவில்லை, மக்கள் விருப்பத்திற்காக மட்டுமே ஆட்சிக்கு வர நினைக்கிறோம். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் ஓரணியில் திரள வேண்டும்.

திமுக ஒரு ஊழல் கட்சி, ஊழல் அரசாங்கம், அதை அகற்ற வேண்டும் என்று பாஜக கருதுகிறது. அந்த நிலைப்பாடோடு எங்களுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது.

இன்னும் சில கட்சிகள் எங்களுடன் இணையவுள்ளன, சரியான நேரத்தில் உங்களுக்கு மரண அடி கொடுப்போம். 200 தொகுதிகளில் வெற்றிப் பெறுவதுதான் கனவு, ஆனால் நிஜத்தில் 210 தொகுதிகளில் வெற்றிப் பெறுவோம்” என்று பேசினார்.

AIADMK General Secretary Edappadi K. Palaniswami has said that we are not a fraud to share power and that the AIADMK will form the government with a clear majority.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு: முதல்வா் முன்னிலையில் ஒப்பந்தம்

தனிமையிலொரு இரவில் தற்படம்... சஞ்சி ராய்!

மலரோணப் பாட்டு... பார்வதி நாயர்!

அரேபிய நேசம்... அனுஷ்கா சென்!

மீரட்: பெண்களைக் கடத்தும் நிர்வாண கும்பல்! போலீஸார் விசாரணை

SCROLL FOR NEXT