உயர் நீதிமன்ற மதுரைக் கிளை DPS
தமிழ்நாடு

ஓரணியில் தமிழ்நாடு! மக்களிடம் ஓடிபி பெற தடை: உயர் நீதிமன்ற மதுரை கிளை

திமுக உறுப்பினர் சேர்க்கைக்காக மக்களிடமிருந்து ஓடிபி பெற தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை: ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில், திமுக உறுப்பினர் சேர்க்கையின்போது மக்களிடமிருந்து ஓடிபி பெறுவதற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை பிறப்பித்துள்ளது.

திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை பிரசாரம் தமிழகம் முழுவதும் தொடங்கி நடந்து வருகிறது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், மக்களிடைமிருந்து ஓடிபி பெற தடை விதித்துள்ளனர்.

இந்த வழக்கில், இந்திய தேர்தல் ஆணையத்தையும் சேர்த்து, பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

டிஜிட்டல் முறையில் தனிநபர் தரவுகள் எவ்வாறு பாதுகாப்படுகிறது என்பது பற்றி மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதோடு, ஓடிபி தகவல்களை பொதுமக்கள் யாருக்கும் வழங்க வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்து வரும் நிலையில், எதற்காக ஓடிபி கேட்கிறார்கள் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

ஆதார் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கும் நிறுவனம் அதனை விற்பனை செய்தால் என்ன செய்வது? சேகரிக்கப்படும் விவரங்கள் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதற்கான விவரங்கள் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டத்தின்கீழ் உறுப்பினா் சோ்க்கையில், திமுகவினர் வீடு வீடாகச் சென்று, மக்களிடமிருந்து வாக்காளர் அட்டை விவரங்களையும் ஓடிபி எண் பெற்று ஓரணியில் தமிழ்நாடு செயலியில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT