புனித பனிமய மாதா ஆலயம் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

ஆக. 5-ல் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் ஆக. 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் ஆக. 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இது பொருந்தும்.

மேலும், அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுர் விடுமுறை நாளில் அனைத்து சார்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளா்களை கொண்டு செயல்படும்.

உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு ஆக. 9 ஆம் தேதி (சனிக்கிழமை) முழு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3.6 கோடி சொத்துக்காக சண்டையிட்ட பிள்ளைகள்! கடைசியாக தெரிய வந்த உண்மை!!

பயங்கரவாதம் ஒருபோதும் காவி நிறத்தில் இருந்ததில்லை, இனியும் இருக்காது: ஃபட்னவீஸ்

உளவுத்துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி: முதல்வர் நெகிழ்ச்சி!

பிராட்மேனின் 90 ஆண்டுகால சாதனையை முறியடிப்பாரா ஷுப்மன் கில்?

SCROLL FOR NEXT