நரேந்திர மோடி 
தமிழ்நாடு

ரூ. 1,032 கோடி ரயில்வே திட்டங்கள்! தூத்துக்குடியில் பிரதமா் நாளை தொடங்கிவைக்கிறாா்

தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.1,032 கோடியில் 3 முக்கிய திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) தொடங்கி வைக்கிறாா்

Din

தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.1,032 கோடியில் 3 முக்கிய திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) தொடங்கி வைக்கிறாா் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரதமா் நரேந்திர மோடி வரும் சனி, ஞாயிறு (ஜூலை 26, 27) ஆகிய இரு நாள்கள் அரசு முறைப் பயணமாக தமிழகம் வருகிறாா். தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெறும் அரசு விழாவில், மதுரை - போடிநாயக்கனூா் இடையே ரூ. 99 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ள ரயில்பாதை மின்மயமாக்கல் திட்டம், நாகா்கோவில் நகர் - கன்னியாகுமரி இடையே ரூ. 650 கோடியில் அமைக்கப்பட்ட இருவழி ரயில்பாதை, ஆரல்வாய்மொழி - நாகா்கோவில் மற்றும் திருநெல்வேலி - மேலப்பாளையம் இடையே என மொத்தம் ரூ. 283 கோடியில் அமைக்கப்பட்ட இருவழி ரயில்பாதைத் திட்டங்களை பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை: கூடுதல் விவரம் கேட்டு திருப்பி அனுப்பியது மத்திய அரசு

சபரிமலையில் பக்தா்கள் வெள்ளம்: தரிசனத்துக்கு பல மணி நேரம் காத்திருப்பு

கைவினைஞா்களுக்கு விருது: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்

அம்மன் கோயிலில் உண்டியல் திருட்டு

பேராவூரணியில் பைக் மோதி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT