பாமக தலைவர் அன்புமணி நடைப்பயணம்.  
தமிழ்நாடு

100 நாள் நடைப்பயணம்... திருப்போரூரில் இருந்து தொடங்கினார் அன்புமணி!

‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி நடைப்பயணம்.

இணையதளச் செய்திப் பிரிவு

‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தன்னுடைய 100 நாள்கள் நடைப்பயணத்தை திருப்போரூரில் இருந்து இன்று(ஜூலை 25) தொடங்கியுள்ளார்.

திருப்போரூரில் உள்ள முருகன் கோயிலில் தரிசனம் செய்த அன்புமணி, அங்குள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பின்னர் தனது நடைப்பயணத்தைத் தொடங்கினார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாளான இன்று(ஜூலை 25) மாலை, சென்னையை அடுத்த திருப்போரூரில் தொடங்கியுள்ள இந்தப் பயணம் தமிழகத்தின் முக்கிய தொகுதிகள் வழியாக பயணித்து தமிழ்நாடு நாளான நவ.1-ஆம் தேதி தருமபுரியில் நிறைவடையவுள்ளது.

முதல்கட்டமாக இன்று திருப்போரூரில் தொடங்கி, ஜூலை 26 - செங்கல்பட்டு, உத்தரமேரூர், ஜூலை 27-இல் காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர், ஜூலை 28 -இல் அம்பத்தூர், மதுரவாயல், ஜூலை 31-இல் கும்மிடிப்பூண்டி, ஆக.1 -இல் திருவள்ளூர், திருத்தணி, ஆக.2-இல் சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆக.3 -இல் ஆற்காடு, வேலூர், ஆக. 4 -இல் வாணியம்பாடி, திருப்பத்தூர் வரை அவர் நடைப்பயணம் செய்கிறார்.

அடுத்தகட்ட பயண விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT