கோயில் சிறப்புகளைக் கேட்டறியும் பிரதமர் மோடி 
தமிழ்நாடு

சோழர்களின் பெருமைகளைக் கேட்டறிந்த மோடி!

கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் வளாகத்தில் தேவார திருவாசக பதிகங்கள் பாடி ஓதுவார்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் வளாகத்தில் தேவார திருவாசக பதிகங்கள் பாடி ஓதுவார்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். கோயில் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோயில் மாளிகையில் உள்ள சிலைகள், சிற்ப வேலைபாடுகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் பெருமைகளைக் கேட்டறிந்தார். அவர்கள் போர் புரிந்த இடங்கள், அவர்களின் எல்லை விரிவாக்கம் உள்ளிட்டவை குறித்துக் கேட்டறிந்தார்.

சோழர் கால செப்பேடுகள், உலோலாத்தில் வடிக்கப்பட்ட சிலைகள், கற்களில் செதுக்கப்பட்ட சிலைகள் போன்றவற்றை பார்வையிட்டு அவை குறித்து அறிந்துகொண்டார்.

தொடர்ந்து, கோயிலின் முக மண்டபம், மகா மண்டபம் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏற்றிய மக்கள்

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

காா் மீது தண்ணீா் லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

நாளை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

தில்லியில் கனரக பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை

SCROLL FOR NEXT