நாட்டில் முதல் முறையாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 800 சதுர அடியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச மனைப்பட்டாவை முதல்வர் என்.ரங்கசாமி திங்கள்கிழமை வழங்கினார்.
இதுவரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 600 சதுரடி அளவில்தான் இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டு வந்தது. இதை உயர்த்தி 800 சதுர அடி அளவில் நாட்டில் முதல் முறையாக இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது.
சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம் தொகுதியான மணவெளி தொகுதியில் 236 பேருக்கு இப்பட்டா வழங்கப்பட்டது. மேலும் இந்த மக்கள் வீடு கட்டிக் கொள்ள நிதியுதவி ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தியும் முதல்வர் என்.ரங்கசாமி வழங்கினார்.
சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம், எம்.எல்.ஏ,க்கள் ஆர்.செந்தில்குமார், கே.எஸ்.பி. ரமேஷ், அரசு ஆணையர் மற்றும் செயலர் டாக்டர் ஏ. முத்தம்மா, துறையின் இயக்குநர் ஏ. இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.