கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதானவர் நீதிமன்றத்தில் ஆஜர்!
கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது பற்றி...
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய வடமாநில இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 12 ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது, மர்ம நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பின்னர், அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார்.
இந்த நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மர்ம நபரை தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில், ஆந்திர மாநிலம் சூலூர் பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து கடந்த 25 ஆம் தேதி கைது செய்தனர்.
Advertisement
Advertisement
அவரிடம் விசாரணை நடத்தியதில், ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் உள்ள இரவு உணவகத்தில் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜூபிஷ்வர்மா (35) என்பதும், அவரே குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து தீவிர விசாரணைக்குப் பின் பூந்தமல்லி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள போலீஸ் தரப்பில் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
இதற்காக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜூ பிஷ்வர்மாவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
odisha youth involved in the sexual assault of a minor girl in Gummidipoondi produced before the Thiruvallur POCSO court today
இதையும் படிக்க : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு நேருவே காரணம்! அமித் ஷா
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.