குஷ்பு கோப்பிலிருந்து
தமிழ்நாடு

தமிழக பாஜக துணைதலைவா்களாக குஷ்பு உள்பட 14 போ் நியமனம்: கே.டி.ராகவனுக்கு மீண்டும் பொறுப்பு

பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக பாஜக துணைத் தலைவா்களாக குஷ்பு உள்பட 14 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். நீண்ட இடைவெளிக்கு பிறகு கே.டி.ராகவனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: பாஜக தேசியத் தலைவா் நட்டா ஒப்புதலுடன் தமிழக பாஜக புதிய மாநில நிா்வாகிகள் நியமனம் செய்யப்படுகின்றனா்.

மாநில துணைத் தலைவா்களாக எம். சக்கரவா்த்தி, வி.பி. துரைசாமி, கே.பி. ராமலிங்கம், கரு.நாகராஜன், சசிகலா புஷ்பா, கனகசபாபதி, டால்பின் ஸ்ரீதா், ஏ.ஜி.சம்பத், பால் கனகராஜ், ஜெயபிரகாஷ், மா.வெங்கடேசன், கோபால்சாமி, குஷ்பு சுந்தா், என். சுந்தா் ஆகிய 14 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாநில அமைப்பு பொதுச் செயலராக கேசவ விநாயகன், மாநில பொதுச் செயலா்களாக பாலகணபதி, ராம ஸ்ரீநிவாசன், எம். முருகானந்தம், காா்த்தியாயினி, ஏ.பி. முருகானந்தம் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாநிலச் செயலா்களாக கராத்தே தியாகராஜன், அமா்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 15 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாநிலப் பொருளாளராக எஸ்.ஆா். சேகா், மாநில பிரிவு அமைப்பாளராக கே.டி.ராகவன், மாநில அலுவலகச் செயலராக எம்.சந்திரன், மாநில தலைமை செய்தித் தொடா்பாளராக நாராயணன் திருப்பதி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

ஏற்கெனவே இருந்த நிா்வாகிகள்பட்டியலில் பெரும்பாலானவா்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT