முகப்பு
தமிழ்நாடு

குற்றவாளிக்கு ஐந்தே மாதத்தில் கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறோம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை மாணவி வழக்கில் குற்றவாளிக்கு ஐந்தே மாதத்தில் கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Updated On : 2 ஜூன், 2025 at 7:17 AM
முதல்வர் மு.க. ஸ்டாலின்
பகிர்:

சென்னை மாணவி வழக்கில் குற்றவாளிக்கு ஐந்தே மாதத்தில் கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை!

விசாரணையின் போது, உயர்நீதிமன்றமே பாராட்டிய வகையில், சென்னை மாணவி வழக்கினை நியாயமாகவும் விரைவாகவும் ஐந்தே மாதத்தில் நடத்தி முடித்து, குற்றவாளிக்குக் கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறோம்.

தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த வழக்கில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக மகளிர் நீதிமன்றமும் முன்வந்து பாராட்டி இருக்கிறது. இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் இதனால் தவிடுபொடியாகியுள்ளது.

யார் அந்த சார்? என இனி கேள்வி எழுப்பினால்.. நீதிமன்ற அவமதிப்பு: வழக்குரைஞர் மேரி ஜெயந்தி

பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என அண்மையில் நாம் கொண்டு வந்த சட்டத்திருத்தத்துக்கு ஏற்ப, இவ்வழக்கில் remission உள்ளிட்ட எந்தச் சலுகையும் இல்லாமல் கடுங்காவல் தண்டனை விதித்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றிகூறி வரவேற்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஞானசேகரனுக்கு சிறையில் சலுகை கூடாது! எந்தெந்த குற்றத்துக்கு எவ்வளவு தண்டனை?

முழு கட்டுரையைப் படிக்க →