மேளதாளத்துடன் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு.  
தமிழ்நாடு

வேலூரில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு

வேலூர் கொணவட்டத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

DIN

வேலூர் கொணவட்டத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3 முதல் ஏப். 15 வரை நடத்தப்பட்டது. அதேபோன்று 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஏப். 7 முதல் 17-ஆம் தேதி வரையும், 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஏப். 8 முதல் 24-ஆம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தோ்வுகள் நடைபெற்றன.

அதைத் தொடா்ந்து, பள்ளி மாணவா்களுக்கு ஏப். 25 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் திறக்கப்பட்டன. இந்த நிலையில் வேலூர் கொணவட்டத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை!

ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் 38 பேரை வரவேற்கும் விதமாக மேளதாளங்கள் ஏற்பாடு செய்து மாணவர்களுக்கு மணி மாலை அணிவித்து, தலையில் கிரீடம் வைத்து, கையில் பலூன் கொடுத்து மலர் தூவி உற்சாகமாக பெற்றோருடன் சேர்த்து ஊர்வலமாக அழைத்து வந்து வகுப்பறையில் அமரவைத்தனர்.

பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு சார்பில் செய்யப்பட்ட இந்த ஏற்பாட்டால் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கர்பா குயின்... அனன்யா!

மகளிர் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஆஸி. பந்துவீச்சு!

பூங்காற்றுத் திரும்புமா.... மான்யா!

முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் குறித்து அமித் ஷா கருத்து: காங். கடும் கண்டனம்!

எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண்!

SCROLL FOR NEXT