போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் X | Sivasankar
தமிழ்நாடு

பேருந்துக் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

பேருந்துக் கட்டண உயர்வு குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம்.

DIN

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

டீசல் விலை உயா்வுக்கு ஏற்ப, பேருந்துகளின் கட்டணத்தை உயா்த்த உத்தரவிடக் கோரியும், ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை நிா்ணயிக்கும் வகையிலும், உயர்நிலைக்குழுவை நியமிக்கக் கோரியும், தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இதனிடையே பேருந்துக் கட்டண உயா்வு குறித்து அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியாா் பேருந்து உரிமையாளா்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்தாலோசித்து நான்கு மாதங்களில் முடிவெடுக்கும்படி உயா்நிலைக்குழுவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பேருந்துக் கட்டண உயர்வு குறித்து கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்தாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படும் என்று வெளியாகும் செய்தி தவறானது. அரசுப் பேருந்துக் கட்டணம் உயராது என்பதால்தான் தனியார் பேருந்து சங்கத்தினர் நீதிமன்றம் சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT